நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சர்க் கரை ஆலைக்கு கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் 2,500 டன் சர்க்கரை வந்தது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இதே குழுமத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் ஹலியாரில் சர்க்கரை ஆலை உள்ளது.அங்கிருந்து நெல்லிக்குப்பம் ஆலைக்கு 36 வேகன்களில் 2 ஆயிரத்து 500 டன் சர்க்கரை நேற்று வந்தது. இதை ரயிலில் இருந்து லாரிகள் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் ஆலைக்கு எடுத்து செல்லும் பணி நடக்கிறது.ஆலை அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லிக்குப்பத்தில் கரும்பு அறவை குறைந்ததால் சர்க்கரை தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள எங்கள் ஆலையில் இருந்து சர்க்கரையை கொண்டு வருகிறோம். இந்த சர்க்கரை சுத்திகரிக்கப்பட்ட சல்பர் கலக்காததாகும். இதை நுகர்வோர் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
அங்கிருந்து வந்துள்ள சர்க்கரையை அரை கிலோ ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப உள்ளோம்' என்றனர்.விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லிக்குப்பம் ஆலையில் ஆண்டுக்கு 12 லட்சம் டன் கரும்பு அறவை நடக்கும். மத்திய அரசு அறிவித்த விலையைவிட குறைவாக ஆலை நிர்வாகம் வழங்கியதால், விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை குறைத்தனர். இதனால் ஆண்டுக்கு 6 லட்சம் டன் அளவு மட்டுமே கரும்பு அறவை நடக்கிறது. கர்நாடகாவில் இருந்து அதிக செலவு செய்து சர்க்கரையை கொண்டு வருகின்றனர். கரும்புக்கு கூடுதல் விலை கொடுத்தால், இங்கு கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE