புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதிலும் ஆசிய அளவில் வேலைவாய்ப்புகளை பெறுவதில் இந்திய ஐஐடிக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
![]()
|
இது குறித்து ஐஐடி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தொற்று காலகட்டத்தில் நாங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறை என்ற இரண்டு முறைகளிலும் கல்வி கற்றுதரப்பட்டது. இதில் காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஆன்லைன் முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பெரும்பாலான ஐஐடி நிறுவனங்களில் சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிய நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐஐடி _ஐதராபாத்தை பொறுத்த வரையில் ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் முக்கிய வேலை அளிக்கும் நாடுகளாக இருந்து வருகின்றன.
![]()
|
இதனிடையே முதன்முறையாக கான்பூர் ஐஐடியில் 50க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்களும் சென்னை ஐஐடியில் 53 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் புதிய வேலை வாய்ப்பில் பங்கேற்றன. அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐதராபாத் ஐஐடியில் வேலை வாய்ப்பு தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 490 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 550 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் சென்னை ஐஐடி மாணவர்களின் எண்ணிக்கை 1419 ல் இருந்து 1450 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE