பொது செய்தி

இந்தியா

ஜன., 1 முதல் இதெல்லாம் மாறுது

Updated : டிச 22, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி:அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட
ஜன., 1 முதல் இதெல்லாம் மாறுது

புதுடில்லி:அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:

* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது. அதன்படி, அந்த காசோலையின் எண், யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே, பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது சுய விருப்பத்தில் அவரவர் பதிவு செய்து கொள்ளலாம்

* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தற்போது, மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதனால், 94 லட்சம் பேர் பயன் பெறுவர்

* வரும், ஜன., 15ம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும்போது, அந்த எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்

* 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம், சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது

* பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள்,ஜன., 1 முதல், கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
21-டிச-202018:29:24 IST Report Abuse
Kundalakesi Tasmac koduthal tamil makkal kushi avanga arasargale
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202006:10:41 IST Report Abuse
Mani . V "வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம் சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது" - கொஞ்சம், கொஞ்சமாக அடிமை வாழ்க்கைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வரும் காலம் "பரதேசி" பட பாணியில் அமைந்து விடும் - அனைவரும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைகளாக.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-டிச-202011:00:22 IST Report Abuse
Chowkidar NandaIndiaவாட்ஸ் அப் என்பது பஜாவிற்கோ மத்திய அரசிற்கோ சொந்தமானதன்று. அது தனியாருக்கு சொந்தமானது. அதோடு இந்த செயலி பழைய அன்ட்ரொயிட் பதிப்புகளில் செயல்படாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தெரியாமல் பப்பு, ஊழல் கட்சி பாணியில் செய்வதெல்லாம் தப்பு என்று ஒப்பாரி வைப்பது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது இந்த நாட்டின் தலையெழுத்து....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202004:16:01 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை.. அருமையான திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X