கடலுார் : கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் 'தமிழகத்தை சீரமைப்போம்' நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க அக்கட்சியின் மாநில பொறியாளர் அணி செயலர் டாக்டர் வைத்தீஸ்வரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக 'தமிழகத்தை சீரமைப்போம்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இன்று (21ம் தேதி) பகல் 12:30 மணிக்கு செஞ்சி கூட்ரோடு, 2:30 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மாளிகையிலும் பேசுகிறார்.நாளை 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கண்டாச்சிபுரம் கூட்ரோடு, 11:00 மணிக்கு விழுப்புரம் யோகலட்சுமி மகால், 12:00 மணிக்கு நெல்லிக்குப்பம் நகர், மதியம் 2:30 மணிக்கு கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபம், மாலை 5:00 மணிக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஓட்டல் கிராண்ட் செரினா, 6:00 மணிக்கு திண்டிவனம் ஐஸ்வர்யா பவன் (ஓட்டல் ஆரியாஸ் அருகில்) நடக்கும் நிகழ்ச்சிகளில் பேசுகிறார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE