பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் குப்பை, கழிவு நீர்

Added : டிச 20, 2020
Share
Advertisement
பெருமாள்பட்டு : பெருமாள்பட்டு ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில், குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்கு சக்தி நகர், முல்லை நகர் உட்பட, 15க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.இந்த நகர்களில், கழிவு நீர் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள்

பெருமாள்பட்டு : பெருமாள்பட்டு ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில், குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்கு சக்தி நகர், முல்லை நகர் உட்பட, 15க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.இந்த நகர்களில், கழிவு நீர் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, சக்தி நகர் மற்றும் முல்லை நகர் பகுதிகளில், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சாலையிலேயே விடப்படுவதாலும், குப்பை கொட்டி இருப்பதாலும், சேறும், சகதியுமாக சாலை மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெருமாள்பட்டு ஊராட்சியில், கழிவு நீர் மற்றும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதுகுறித்து, ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருமாள்பட்டு ஊராட்சியில், நேரில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X