மந்தாரக்குப்பம் : நெய்வேலி 18ம் படி அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் நெய் அபிேஷகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன் பதிவு, கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால் சபரிமலை கோவிலுக்கு தொடர்ந்து சென்று வரும் பக்தர்கள் வேதனையடைந்தனர். எனினும் அய்யப்ப பக்தர்கள், மார்கழி மாதம் முதல் மாலை போட்டு 48 நாட்கள் விரதம் இருந்தனர். சபரிமலை கோவிலுக்குசெல்ல முடியாததால், மந்தாரக்குப்பம் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் குருசாமிகள் நாகராஜ், கைலாசம் தலைமையில் நெய்வேலி வட்டம் 25ல் உள்ள கோகுல கண்ணன் ஆலயத்தில் உள்ள பதினெட்டாம் படி ஐயப்பன் சன்னதிக்கு சென்றனர்.
அங்கு பக்தர்கள் இருமுடி கட்டி,18படியேறி நேர்த்தி கடன் செலுத்தி, சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு சுவாமிக்கு நடந்த நெய் அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE