பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : டிச 20, 2020
Share
Advertisement
மயங்கி விழுந்த முதியவர் பலிதிருத்தணி: திருத்தணி, பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி, 63. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த, 18ம் தேதி திடீரென ராமமூர்த்தி வீட்டில் மயங்கி விழுந்தார். அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை ராமமூர்த்தி இறந்தார்.இது குறித்து, திருத்தணி கிராம நிர்வாக

மயங்கி விழுந்த முதியவர் பலிதிருத்தணி: திருத்தணி, பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி, 63. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த, 18ம் தேதி திடீரென ராமமூர்த்தி வீட்டில் மயங்கி விழுந்தார். அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை ராமமூர்த்தி இறந்தார்.இது குறித்து, திருத்தணி கிராம நிர்வாக அலுவலர் துரைகண்ணன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஜே.சி.பி., ஓட்டுனர் தற்கொலைகும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் அருகே, செதில்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் ராஜா, 28. ஜே.சி.பி., ஓட்டுனர். குடி பழக்கத்தால், குடும்பத்தை சரி வர பார்த்துக் கொள்ள முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான ராஜா, 23ம் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.ஆபத்தான நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். பாதிரி வேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவருக்கு 'காப்பு'சோழவரம்: சோழவரம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, காரனோடை பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில், ஆள்நடமாட்டம் அதிகமாக இருந்ததை கண்டு, அங்கு சென்று சோதனையிட்டனர். சந்தேகப்படும் வகையில் அங்கு சுற்றித்திரிந்தவரை பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.விசாரணையில், அவர், காரனோடை அய்யப்பன், 38, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X