சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 ஆயிரம் ஏக்கர் உளுந்து 'பாழ்'

Added : டிச 20, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர்உளுந்து பயிர்கள் அழுகியதால், நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் போர்வெல், கிணறு மற்றும் மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.நடப்பாண்டு

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர்உளுந்து பயிர்கள் அழுகியதால், நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் போர்வெல், கிணறு மற்றும் மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.நடப்பாண்டு விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்திருந்தனர். மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக, விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து வயல்களில் தண்ணீர் தேங்கியது.தண்ணீர் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக வடியாததால், உளுந்து பயிர்கள் முற்றிலும் அழுகியுள்ளன. இதனால் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும், எஞ்சியுள்ள உளுந்துசெடிகளில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் நடப்பாண்டு உளுந்து மகசூல் பாதியாக குறையும். எனவே, பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கீடு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X