திருத்தணி : ஊராட்சி ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்து நிரம்பியதால், 12 ஏக்கர் பரப்பில் பயிரிட்டிருந்த நெல், வேர்க்கடலை ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இந்நிலையில், 'நிவர், புரெவி' புயலால் பெய்த கனமழையால் வேலஞ்சேரி பெரிய ஏரி முழு கொள்ளளவை கடந்த வாரம் எட்டியது.ஏரியின் உபரி நீர் கடைவாசல் வழியாக வெளியேறிய போதும், ஏரிக்கு தொடர்ந்து கூடுதல் நீர்வரத்து வந்ததால், ஏரியின் அருகே பயிரிட்டிருந்த, 12 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.அதாவது, மூன்று விவசாயிகளின், 8 ஏக்கர் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் 4 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏரியில் தண்ணீரில் குறைவதற்குள் நெற்பயிர், வேர்க்கடலை பயிர் சேதம் அடையும் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE