பிரிட்டனில் புதிய கொரோனா தொற்று : சுகாதார அமைச்சகம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Updated : டிச 21, 2020 | Added : டிச 20, 2020
Share
Advertisement
பிரிட்டனில் பரவி வரும், மாறுபட்ட குணமுடைய கொரோனா தொற்று குறித்து விவாதிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அவசர கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், புதிய தன்மை உடைய கொரோனா வைரஸ் கண்டறியபட்டுள்ளது. இதன் காரணமாக, தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.எனவே, இம்மாதம் இறுதி வரை, பிரிட்டனின் பல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு

பிரிட்டனில் பரவி வரும், மாறுபட்ட குணமுடைய கொரோனா தொற்று குறித்து விவாதிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அவசர கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், புதிய தன்மை உடைய கொரோனா வைரஸ் கண்டறியபட்டுள்ளது. இதன் காரணமாக, தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.எனவே, இம்மாதம் இறுதி வரை, பிரிட்டனின் பல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




பிரிட்டனில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த புதிய தன்மை தொற்று குறித்து, விரிவாக விவாதிக்க, நம் நாட்டின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கான அவசர கூட்டத்தை இன்று நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில், இணை கண்காணிப்பு குழு கூட்டம், இன்று டில்லியில் நடைபெற உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X