பொது செய்தி

தமிழ்நாடு

தார் சாலை அகலப்படுத்த கோரிக்கை

Added : டிச 20, 2020
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடத்திலிருந்து தாழநல்லூர் செல்லும் தார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் - தாழநல்லூர் தார் சாலையைப் பயன்படுத்தி பஸ், லாரி, வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், இந்த சாலையை பயன்படுத்தி திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள்

பெண்ணாடம் : பெண்ணாடத்திலிருந்து தாழநல்லூர் செல்லும் தார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் - தாழநல்லூர் தார் சாலையைப் பயன்படுத்தி பஸ், லாரி, வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், இந்த சாலையை பயன்படுத்தி திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளங்கள் மற்றும் விளைநிலங்களில் சிக்கி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X