யாருக்கு நன்றி அதிகம்: கமல் கண்டுபிடிப்பு

Updated : டிச 22, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை:''உப்பை சுவாசித்தவர்களுக்கு நன்றி அதிகம் இருக்கும்; எங்கள் கட்சி வேட்பாளர்களில், மீனவர் ஒருவர் நிச்சயம் இருப்பார். இந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை எல்லாம், நாம் மீட்டெடுக்க வேண்டும்,'' என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கூறினார்.நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல், தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை, நேற்று ஆலந்துாரில் துவக்கினார்.
நன்றி,கமல், கண்டுபிடிப்பு, மக்கள் நீதி மையம், காந்தி,தாத்தா; எம்.ஜி.ஆர்., வாரிசு

சென்னை:''உப்பை சுவாசித்தவர்களுக்கு நன்றி அதிகம் இருக்கும்; எங்கள் கட்சி வேட்பாளர்களில், மீனவர் ஒருவர் நிச்சயம் இருப்பார். இந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை எல்லாம், நாம் மீட்டெடுக்க வேண்டும்,'' என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கூறினார்.

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல், தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை, நேற்று ஆலந்துாரில் துவக்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஜெகஜீவன்ராம் நகர் அவென்யூ பகுதியில், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் நடந்து வரும், மழை நீர் சுரங்க வடிகால்வாய் திட்டத்தையும் பார்வையிட்டார்.

பின், கமல் பேசியதாவது: உலகில், 1.20 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆமைகள், மீனவர்களின் நண்பன் என்றால் மிகையாகாது. நம் வணிக முன்னோடிகள், ஆமை வழித்தடங்களை பின்பற்றி, உலகெங்கும் சென்றுள்ளனர்.இந்த உயிரினத்தை காக்க வேண்டியது நம் கடமை. ஆமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை. சுற்றுச்சூழலுக்காகவும், இயற்கையை பாதுகாக்கவும், தொலைநோக்கு அரசியலை முன்னெடுப்பதே எங்கள் வேலை.

ராஜராஜசோழன் காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஏரி, குளம், நீர்நிலைகளை எல்லாம் மீட்டெடுக்க வேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது என்ற உறுதியோடு நாங்கள் வந்துள்ளோம். நான் பணக்காரர்களிடம் மட்டும் பிரசாரம் செய்ய வரவில்லை. இவர்களும் மக்கள் தானே... வரி கட்டுகிறார்களே... அரசுக்கு மீனவர்கள் வாயிலாக வரும் ஆண்டு வருமானம், 60 ஆயிரம் கோடி ரூபாய்.எங்கள் வேட்பாளர்களில் ஒரு மீனவர் இருப்பார். உப்பை சுவாசித்தவர்களுக்கு நன்றி அதிகம் இருக்கும். அதையும் நாங்கள் மனதில் வைத்துள்ளோம். நாங்கள் உறுதிமொழி பூண்டு, இந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


'காந்தி என் தாத்தா; எம்.ஜி.ஆர்., வாரிசு நான்'சென்னை, போரூரில் பிரசாரம் செய்த, கமல் பேசியதாவது: போரூர் என்ற கிராமம், நகரமாக அதி வேகமாக வளர்ந்து விட்டது; ஆனால்,ஆதார வசதிகள் வளரவில்லை. மதுரவாயல் தொகுதியில், பெண்கள் தண்ணீருக்காக அலைகின்றனர்.இங்கே நிலத்தின் விலை உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதார நிலை உயரவில்லை.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை, 10 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் காத்திருக்கிறது. திருடர்கள் வராமல், நேர்மையானவர்கள் பதவிக்கு வந்தால் அனைத்தும் நடக்கும்.சிலர், 'தேர்தலால் தான், எம்.ஜி.ஆரை கமல் சொந்தம் கொண்டாடுகிறார்' என்கின்றனர். அவர்கள் செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருந்துள்ளனர். எங்கள் முதல் கோஷமே, 'நாளை நமதே' என்பது தான். மீண்டும், அவர் பெயரை சொல்லி காசு பார்க்கும் கூட்டம் எங்களுடையது இல்லை.

நாங்கள் காந்தி, எம்.ஜி.ஆர்., பெரியார், அம்பேத்கர் பெயர்களையும் சொல்கிறோம். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து உணவருந்த வேண்டும் என்று நினைத்த, எம்.ஜி.ஆரின் கருணை எங்களுக்கு இருப்பதால், நாங்கள் அவரது நீட்சி தான். நல்லவை நினைக்கும் எல்லாருமே, எம்.ஜி.ஆரின் வாரிசு தான். நானும், எம்.ஜி.ஆரின் வாரிசு தான்.இதை பட்டயம் போட்டு விற்க புறம்போக்கு நிலம் அல்ல. எம்.ஜி.ஆர்., உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அவர் மக்கள் திலகம். காந்தி என் தாத்தா. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
21-டிச-202017:35:52 IST Report Abuse
madhavan rajan எம் ஜி ஆருக்கு முன்னாலேயே காமராஜர் மத்திய உணவு திட்டத்தை அமுல் படுத்தினார். அதெல்லாம் இவருக்கு தெரியாதோ? அரசியலுக்கு வருபவர் சரித்திரத்தை சரியாக படித்துவிட்டு வரவேண்டும்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-டிச-202015:00:00 IST Report Abuse
Sridhar உப்புக்காத்து பட்டுச்சுன்னா உணர்ச்சிதான் ஜாஸ்தியாகும்பாங்க. நன்றி கூடவா? புதுக்கதயால்லே இருக்கு?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
21-டிச-202017:38:09 IST Report Abuse
madhavan rajanஅதனால்தான் பல முன்னணி நடிகர்கள் ECR அருகில் பங்களாவை வைத்திருக்கிறார்கள் போலும். ஆனால் அவர்கள் பணத்துக்குத்தான் நரியுடையவர்களாக இருக்கிறார்கள். ரசிகப்பெருமக்களுக்கல்ல....
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
21-டிச-202012:20:33 IST Report Abuse
Balaji ஆமையை காப்பாத்தணும்னுறார்.. அப்புறம் ஆமைக்கறி துன்னவரோட கூட்டு வெக்கறார்.. என்ன ஜென்மமோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X