விருத்தாசலம் : டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில்இறந்த விவசாயிகளுக்கு விருத்தாசலத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மக்கள் அதிகாரம் மாநில அமைப்பாளர் ராஜ்,நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் கதிர்காமன் முன்னிலை வகித்தனர்.கடலுார் மாவட்ட அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலர் கார்மாங்குடி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஜனநாயக விவசாய சங்க தலைவர் கந்தசாமி, செயலர் சுரேஷ், உழவர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, பஞ்சமூர்த்தி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். த.வா.க., மாவட்ட தலைவர் பாலமுருகன்நன்றி கூறினார்.
அனைத்து கட்சி அஞ்சலி:விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் அசோக்தலைமை தாங்கினார்.இந்திய கம்யூ., கட்சி வட்ட செயலர் ராஜசேகர். இந்திய புரட்சிகர மார்க்., கட்சி மாவட்ட செயலர் கோகுல் கிரிஸ்டிபன், தமிழ் தேச மக்கள் முன்னணி அமைப்புராஜேந்திரன். புரட்சிகர பொதுவுடமை இயக்க லெனின்,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE