பொது செய்தி

தமிழ்நாடு

புயலில் சேதமான சாலைகள்தலைமை பொறியாளர் ஆய்வு

Added : டிச 20, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : நிவர், புரெவி புயல்களால் சேதமடைந்த சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக மாறியது. இதனை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விருத்தாசலம் -

விருத்தாசலம் : நிவர், புரெவி புயல்களால் சேதமடைந்த சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நெடுஞ்சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாக மாறியது. இதனை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை மற்றும் சோழத்தரம் - ஸ்ரீமுஷ்ணம் சாலைகளில் நடந்து வரும் பேட்ஜ் ஒர்க் பணிகளை, சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாந்தி ஆய்வு செய்தார்.

பின்னர், விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் மார்க்கத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, கடலுார் - சித்துார் சாலை, அருங்குணம், கடலுார் - திருக்கோவிலுார் - சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணி, கடற்கரை சாலை மற்றும் ஆலப்பாக்கம் பாலத்தில் சர்வீஸ் சாலை, சிதம்பரத்தில் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின்கீழ் புதிய பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.ஆய்வின்போது, கடலுார், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளர் நல்லதம்பி, உதவி பொறியாளர் மருதாச்சலம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X