பொது செய்தி

தமிழ்நாடு

என்ன வேண்டுமானாலும் கடத்தலாம்... வழி மறிக்கும் லஞ்ச பிசாசுகளுக்கு அழுதால் போதும்

Added : டிச 20, 2020
Share
Advertisement
மதுக்கரை:மதுக்கரை அருகே பை - பாஸ் ரோட்டில், வாகனங்களை நிறுத்தி போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால், என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கடத்தலாம் என்ற அபாய நிலை நிலவுகிறது.கோவையிலிருந்து கேரளாவுக்கு, தினமும் மினி சரக்கு வாகனம் முதல் லாரி வரை, கறவை மற்றும் வெட்டு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. இவை நீலம்பூர் - மதுக்கரை பை - பாஸ் வழியாகத்தான்

மதுக்கரை:மதுக்கரை அருகே பை - பாஸ் ரோட்டில், வாகனங்களை நிறுத்தி போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால், என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கடத்தலாம் என்ற அபாய நிலை நிலவுகிறது.கோவையிலிருந்து கேரளாவுக்கு, தினமும் மினி சரக்கு வாகனம் முதல் லாரி வரை, கறவை மற்றும் வெட்டு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. இவை நீலம்பூர் - மதுக்கரை பை - பாஸ் வழியாகத்தான் அதிகளவு வருகின்றன.
இதில் பொள்ளாச்சி ரோடு சந்திப்பிலிருந்து, மதுக்கரை போலீசாரின் எல்லை துவங்குகிறது. இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கை தாண்டியவுடன், முதலில் ரோந்து போலீசார் கறவை மாடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு, 200 ரூபாய் வீதமும், வெட்டு மாடு வாகனங்களுக்கு, 500 ரூபாய் வீதமும் வசூலிக்கின்றனர்.இவவகையில் தினமும், 100 முதல், 120 வாகனங்களில் வசூல் நடக்கிறது. இதையடுத்து, ஸ்டேஷன் போலீசார் ஆங்காங்கே வழிமறித்து குறைந்தபட்சம், 200 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர்.
இதுபோல், எம் சேண்ட், கல், அரிசி போன்றவைகளை கடத்தி வருவோரிடம், வசூலில் ஈடுபடுகின்றனர். சில நாட்களில் மட்டுமே பெயரளவுக்கு வாகனங்களை பிடித்து, கணக்கு காண்பிப்பர்.ஒரு மொபட்டில் குறைந்தபட்சம், 250 - 300 கிலோ வரை அரிசி கடத்தப்படுகிறது. இங்கு, கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை கொடுத்து வாங்கும் கடத்தல்காரர்கள், கேரளாவில், 20 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர்.
இதனால், போலீசாரின் வசூலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தங்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் சரி என்ற எண்ணத்தில் செல்கின்றனர்.பணம் கொடுத்தால் போதும்; என்ன வேண்டுமானாலும் கடத்தலாம் என்ற, இந்த அபாயகரமான போக்குக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் முதுகெலும்புள்ள அதிகாரி யாரோ?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X