கோவை:கொரோனாதான் ஏறக்குறைய போய் விட்டதே...இனி மாஸ்க் அணிய வேண்டாம் என்று நினைத்திருப்பவர்கள், உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். மாஸ்க் அணிந்ததால், கொரோனா மட்டுமல்ல, காசநோய், ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் குறைந்து விட்டதாக, மகிழ்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் டாக்டர்கள்.
குறிப்பாக டி.பி., நோயாளிகள் மாஸ்க் அணிய துவங்கி இருப்பதால், விரைவில் டி.பி., பரவலை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்கின்றனர். ஆகவே, சுவாச கோளாறுகள் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புவோர், இனி மாஸ்க்கையும் ஒரு ஆடையாக அணிந்து கொள்வது நல்லது.கொரோனா ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் ஓடாததால், காற்று மாசு, 80 சதவீதம் குறைந்தது; ஒலி மாசு, 90 குறைந்தும் இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருந்தது.
இதனால் நகரவாசிகள், சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்தது.இப்போது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, மீண்டும் வாகனங்கள் இயங்க துவங்கி உள்ளன. மறுபடியும் காற்றில் புகை மாசு அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரிக்குமே தவிர, குறையாது.ஆகவே, சுவாசம் தொடர்பான நோய்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளதால், கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகும், பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள், தொடர்ந்து மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்கின்றனர், நுரையீரல் துறை மருத்துவ நிபுணர்கள். இதனால், இனி மாஸ்க்கையும் ஒரு ஆடையாக கருதி, வெளியிடங்களுக்கு செல்லும்போது அணிந்தால், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்.
எந்த புது விஷயமும் ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். போக, போக பழகி விடும். இன்றைக்கு நமக்கு பழகி விட்டது. ஆகவே, தொடர்வதில் பிரச்னை இருக்காது என்கிறார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் நுரையீரல் துறை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயக்குமார்.அவர் கூறியதாவது:வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனி சீசன் துவங்கும் போது வீசிங், ஆஸ்துமா, டி.பி., இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மூச்சுத்திணறல், இருமல், சளி என, சிரமப்படுவர்.ஆஸ்பத்திரிக்கு பழைய நோயாளிகள், புதிய நோயாளிகள் வருகை அதிகரிக்கும். கொரோனா தொற்று துவங்கியதில் இருந்து, இதுபோன்ற பிரச்னைகளால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது.
குறிப்பாக, புதிய நோயாளிகள் எண்ணிக்கை ரொம்பவே குறைந்து விட்டது. அதற்கு காரணம், அனைவரும் மாஸ்க் அணிந்ததுதான்.டி.பி., நோயாளிகளிடம் மாஸ்க் அணிய, எவ்வளவு வலியுறுத்தினாலும், 10க்கு இரண்டு நோயாளிகள் கூட அணியமாட்டார்கள். இருமும் போது வாயில் கர்ச்சீப் வைத்து, இரும சொன்னாலும் கேட்க மாட்டார்கள். நோயாளி என்று தெரிந்துவிடும் என்பார்கள். இதனால், டி.பி., எளிதில் பரவியது.
ஆனால் இன்றைக்கு மாஸ்க் இல்லாத, ஒரு டி.பி., பேஷன்டை கூட பார்க்க முடியவில்லை.இந்த நிலை தொடர்ந்தால், டி.பி.யை முழுமையாக ஒழித்து விடலாம்.கோவையில் டி.பி.,நோய் பாதிப்பால் மாதம், 40க்கு கேஸ்களுக்கு மேல் 'ரிப்போர்ட்' ஆகும். கடந்த எட்டு மாதங்களில், அது பாதியாக குறைந்துள்ளது. 2020ல் டி.பி.,நோயை முடிவுக்கு கொண்டு வரும் அறிவிப்பு வர உள்ளது. அதற்கு மாஸ்க்கும் ஒரு முக்கிய காரணம்.அதனால் வீட்டில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் அல்லது ஏதோ ஒரு நோய் தொல்லை இருந்ததால், மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.மருத்துவர்கள் பரிந்துரை செய்யும், நல்ல மாஸ்க்கை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு, கொரோனா காலம் முடிந்தாலும், மாஸ்க்கை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்கின்றனர், நுரையீரல் துறை மருத்துவ நிபுணர்கள்.
இதனால், இனி மாஸ்க்கையும் ஒரு ஆடையாக கருதி, வெளியிடங்களுக்கு செல்லும்போது அணிந்தால், ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம். கோவையில் டி.பி.,நோய் பாதிப்பால் மாதம், 40க்கு கேஸ்களுக்கு மேல் 'ரிப்போர்ட்' ஆகும். கடந்த எட்டு மாதங்களில், அது பாதியாக குறைந்துள்ளது. 2020ல் டி.பி.,நோயை முடிவுக்கு கொண்டு வரும் அறிவிப்பு வர உள்ளது. அதற்கு மாஸ்க்கும் ஒரு முக்கிய காரணம்.'இன்ேஹலர் விற்பனை குறைவு'கோவை மாவட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், ''பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில், ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும், 'இன்ேஹலர்' அதிகம் விற்பனையாகும். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த பத்து மாதங்களாக இதன் விற்பனை அதிகரிக்கவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE