கடலுார் : கடலுார் சில்வர் பீச் 9 மாதங்களுக்கு பிறகு களை கட்டியது.தமிழகத்தில் கொேரா னா தொற்று அதிகரித்து வந்ததையொட்டி அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் யாவும் மூடப்பட்டன.
அதில் கடலுார் சில்வர் பீச்சும் ஒன்று. மக்கள் சில்வர் பீச்சிற்கு செல்லவும், கடலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கடந்த 9 மாதங்களுக்கு பின் கடலுார் மாவட்டத்தில் கொேரானா தொற்று இரட்டை இலக்க எண்களில் உள்ளன.அதையொட்டி அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.அதன்படி பொது மக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக மூடிக்கிடந்த சில்வர் பீச் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொது மக்கள் சில்வர்பீச்சில் குவிந்தனர்.
இருப்பினும் பீச்சில் நடைபாதை கடைகள் இன்னும் முழு அளவில் திறக்கப்படவில்லை. அதேப் போல பொது மக்கள்கடலில் குளிக்கவும் அனுமதியளிக்கப்படவில்லை. கடலில் இறங்கி குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE