சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயணியிடம் திருடியவர் கைது 

Added : டிச 20, 2020
Share
Advertisement
கடலுார் : தஞ்சாவூர், நந்தவனத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27; இவர், கடந்த 14ம் தேதி முதுநகரில் நடந்த தனது சகோதரி மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று சொந்த ஊர் செல்ல கடலுார் வந்தார். வடலுார் செல்லும் அரசு பஸ்சில் பயணித்த அவர், அணிந்திருந்த 1 சவரன் செயினை சட்டை பாக்கெட்டில் வைத்து உறங்கினார்.கண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பார்த்த போது, பாக்கெட்டில் வைத்திருந்த

கடலுார் : தஞ்சாவூர், நந்தவனத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27; இவர், கடந்த 14ம் தேதி முதுநகரில் நடந்த தனது சகோதரி மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று சொந்த ஊர் செல்ல கடலுார் வந்தார்.

வடலுார் செல்லும் அரசு பஸ்சில் பயணித்த அவர், அணிந்திருந்த 1 சவரன் செயினை சட்டை பாக்கெட்டில் வைத்து உறங்கினார்.கண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பார்த்த போது, பாக்கெட்டில் வைத்திருந்த செயின் மற்றும் செல்போனை காணவில்லை. அருகில் இருந்த நபரையும் காணவில்லை.வினோத்குமார் நேற்று வடலுாரில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்தார். முதுநகரில் தன்னுடன் பஸ்சில் பயணித்த நபர் போல் நின்றிருந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து, முதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.அவர், நடுவீரப்பட்டு, நரியங்குப்பம் சேகர், 30; என்பதும், வினோத்குமாரிடம் திருடியதையும் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X