சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் உயிரை காவு வாங்கிய கணவரின் 'குடி'

Added : டிச 20, 2020
Share
Advertisement
மதுரவாயல் : துரவாயலில், திருமணமான மூன்றே மாதத்தில், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது. மதுரவாயல், கண்ணன் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி, 24; எலக்ட்ரீஷியன். இவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா, 20, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.அதீத போதைக்கு அடிமையான கார்த்தி, குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக

மதுரவாயல் : துரவாயலில், திருமணமான மூன்றே மாதத்தில், பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரவாயல், கண்ணன் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி, 24; எலக்ட்ரீஷியன். இவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா, 20, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.அதீத போதைக்கு அடிமையான கார்த்தி, குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதை, அவரது மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்த, வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு, மீன் வாங்க கார்த்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே, கார்த்தி, கதவை உடைத்து, உள்ளே சென்றார்.அப்போது, ரேணுகா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், ரேணுகாவின் தந்தை குடிப்பழக்கம் உடையவர் என்பதால், அவரது குடும்பம் மிகுந்த சிரமப்பட்டது. இதனால், தன் வருங்கால கணவருக்கு, போதை பழக்கம் இருக்க கூடாது என்ற நிபந்தனையுடன், திருமணம் செய்துள்ளார்.ஆனால், எல்லாம் எதிர்மறையாக இருந்ததால், விரக்தியடைந்த ரேணுகா, தற்கொலை செய்தது தெரியவந்தது. திருமணமாகி, மூன்று மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X