பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு

Added : டிச 20, 2020
Share
Advertisement
சென்னை,: தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறது.அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், 2021 மே மாதம் முடிகிறது. எனவே, தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சிங்கா தலைமையிலான,

சென்னை,: தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறது.

அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், 2021 மே மாதம் முடிகிறது. எனவே, தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சிங்கா தலைமையிலான, உயர்மட்ட அதிகாரிகள் குழு, இரண்டு நாள் பயணமாக, இன்று சென்னை வருகிறது. இக்குழுவில், தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மாலே மாலிக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.சட்டசபை தேர்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், இக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் உடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, அரசின் பல்வேறு துறை செயலர்களுடன், நாளை ஆலோசிக்கின்றனர். பின், கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில், பத்திரிகையாளர்களையும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திக்கின்றனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி செல்லும் இக்குழுவினர், அம்மாநிலத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X