சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் செய்வதாக உறுதியளித்து 25 பவுன் மோசடி செய்தவர் கைது

Added : டிச 20, 2020
Share
Advertisement
குனியமுத்தூர்:திருமணம் செய்வதாக கூறி, பெண்ணிடம், 25 பவுன் நகையை மோசடி செய்தவர் சிறையிலடைக்கப்பட்டார்,குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த, 27 வயது பெண் திருமணமாகி, விவாகரத்தானவர். இரண்டாவது திருமணத்திற்காக, மேட்ரிமோனியலில் பதிவிட்டிருந்தார். விழுப்புரத்தை சேர்ந்த, 30 வயது நபர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இருவரும் மொபைல் போன் மூலம் பேசி வந்துள்ளனர்.கடந்த ஒரு

குனியமுத்தூர்:திருமணம் செய்வதாக கூறி, பெண்ணிடம், 25 பவுன் நகையை மோசடி செய்தவர் சிறையிலடைக்கப்பட்டார்,குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த, 27 வயது பெண் திருமணமாகி, விவாகரத்தானவர். இரண்டாவது திருமணத்திற்காக, மேட்ரிமோனியலில் பதிவிட்டிருந்தார். விழுப்புரத்தை சேர்ந்த, 30 வயது நபர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இருவரும் மொபைல் போன் மூலம் பேசி வந்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன், 'தனக்கு தோஷமுள்ளதாகவும், நகையை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும். அதற்கு பின் திருமணம் செய்யலாம்', என கூறியுள்ளார். குனியமுத்தூருக்கு வரவழைத்த அப்பெண், ஸ்டுடியோ ஒன்றில் வைத்து, 25 பவுன் நகையை கடந்த மாதம், 23-ல் கொடுத்துள்ளார்.நகையை வாங்கிச் சென்றவர், அதன் பின் பேசுவதை தவிர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் அப்பெண், தான் விழுப்புரம் வந்து, நகையை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். அந்நபர், தனக்கு கொரோனா பாதிப்புள்ளதால், வர வேண்டாம் என கூறியுள்ளார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுலேகா வழக்கு பதிவு செய்தார், விழுப்புரம் சென்ற தனிப்படை போலீசார், அந்நபரை கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்,விசாரணையில், விழுப்புரம், கோட்டுக்குப்பத்தை சேர்ந்த முகமது சபான் (எ) ரகமத்துல்லா, 30 என தெரிந்தது. இவர் இதற்கு முன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம், எட்டு பவுன் நகையை ஏமாற்றியுள்ளதும். சமரசம் பேசி, பிரச்னையை முடித்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து ரகமத்துல்லா மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X