சென்னை: சட்டசபை பொதுத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இருப்பதாக, முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்த நிலையில், 'கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., தலைமைதான் அறிவிக்கும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறி வருகிறார்.இதனால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு, 9:00 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், திடீர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., - துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம்,காமராஜ் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.கூட்டத்தில், சட்டசபை தேர்தல் கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE