கோவை:ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்சின் கோவை கிளை, செஞ்சிலுவை கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று சிறப்பு வீட்டுக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில், வாடிக்கையாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு வாங்கவும், கட்டவும், பழைய வீட்டினைப் புதுப்பிக்கவும், வணிக வளாகம் கட்டுவதற்கும், வாங்குவதற்கும், அடமான கடன் பெறவும் முன் அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. இவை, 7.75 சதவீத வட்டி விகிதத்தில், பிரதம மந்திரியின் மானிய உதவியான, 2.67 லட்சம் ரூபாய் வரை சிறப்பு அம்சங்களுடன் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE