பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் அதிகாரி மாற்றம் ஸ்ரீரங்கத்தில் கடும் எதிர்ப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கடந்த, 16ம், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆணையராக, சென்னைக்கு, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை, இடமாற்றம் செய்ததற்கு, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் நல

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கடந்த, 16ம், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆணையராக, சென்னைக்கு, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை, இடமாற்றம் செய்ததற்கு, ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் மக்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பில், திருச்சி மாநகர பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், 'ஆன்மிகச் செம்மல்கள் போற்றும் வகையிலும், உலக புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு பேரவை - யுனெஸ்கோ - பாராட்டும் வகையிலும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை மேம்படுத்த, இன்றும் உழைத்து வரும் கோவில் இணை ஆணையர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X