போத்தனூர்:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலசங்கம் (கொசிமா) இணைந்து, தேசிய மின் சிக்கன வார விழா முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.கொசிமா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மின் வாரிய குனியமுத்தூர், செயற்பொறியாளர் நந்தகுமார் தலைமை வகித்து பேசுகையில், "அனல் மின் உற்பத்தியால், மாசு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அணு மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மரபு சாரா எரிசக்தி மூலம் தற்போது இரண்டு லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. வரும், 2022-ம் ஆண்டிற்குள் இதனை, 5.75 லட்சம் மெகா வாட் அளவிற்கு உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சூரிய சக்தி மூலம், 1.75 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இதனை 6 லட்சமாக உயர்த்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.கொசிமா தலைவர் நல்லதம்பி, செயலாளர் நடராஜன், சிட்கோ பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE