தமிழ்நாடு

முரண்பாடு! குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நெடுஞ்சாலை துறை கடிதம்

Updated : டிச 21, 2020 | Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:'நெடுஞ்சாலையோரம் குழாய் பதிக்கும் பணியை, விதிமுறைக்குட்பட்டு மேற்கொள்ளாததால் ஏற்படும் பிரச்னைக்கு, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தான் பொறுப்பு' என, நெடுஞ்சாலை துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், புதிய மற்றும் பழைய கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்க ஏதுவாக,
முரண்பாடு! குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நெடுஞ்சாலை துறை கடிதம்

திருப்பூர்:'நெடுஞ்சாலையோரம் குழாய் பதிக்கும் பணியை, விதிமுறைக்குட்பட்டு மேற்கொள்ளாததால் ஏற்படும் பிரச்னைக்கு, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தான் பொறுப்பு' என, நெடுஞ்சாலை துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், புதிய மற்றும் பழைய கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்க ஏதுவாக, சாலையோரம் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழி, பணி முடிந்த பின், சரிவர மூடப்படுவதில்லை.
ஆங்காங்கே, மண் மற்றும் தார் திட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதியுறுகின்றனர். பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது, அதிகப்படியான புழுதி பறந்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.திருப்பூர் பிரதான ரோடு, அவிநாசி - சேவூர் ரோடு, வெள்ளகோவில் என, பல இடங்களில் இத்தகைய பிரச்னை நிலவுகிறது. ரோட்டின் அவல நிலையால், மக்களின் ஒட்டு மொத்த கோபமும், நெடுஞ்சாலை துறையினர் மீது திரும்புகிறது. 'ரோடை செப்பனிடும் பணியை, அவர்கள் முறையாக செய்வதில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், நெடுஞ்சாலை துறை உட்கோட்ட அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது;சாலையோரம் குழாய் பதிக்க அனுமதி வழங்கும் போதே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குழாய் பதிக்க வேண்டும் என, அனுமதி விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பல இடங்களில், குடிநீர் குழாய் பதித்த பின், சாலையில் மண் மற்றும் தார் கட்டிகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். எனவே, தார் மற்றும் மண் குவியலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.மேலும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் பணியை சரிவர செய்து முடிக்காததால் தான், பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் முறையிடுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, தங்களது ஒப்பந்ததாரரிடம் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.சாலையோரம் குழாய் பதிக்க அனுமதிவழங்கும் போதே, பொதுமக்களுக்குஇடையூறு ஏற்படாத வகையில், குழாய் பதிக்க வேண்டும் என, அனுமதி விதிமுறையில்குறிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் பணியை சரிவர செய்து முடிக்காததால் தான்,பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் முறையிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X