நகை திருடியர் கைது

Added : டிச 20, 2020
Share
Advertisement
வெள்ளகோவில் அருகே, தீர்த்தாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன், 37. மருந்து பொருள் விற்பனையாளர். அவரது மனைவி மகேஸ்வரி 33. தனியார் வங்கி காசாளர். தினசரி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு, வேலைக்கு செல்வது இவர்களது வழக்கம். சில மாதங்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று, திரும்பி வந்து பார்த்த போது, பீரோவிலிருந்த 3 பவுன்

வெள்ளகோவில் அருகே, தீர்த்தாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன், 37. மருந்து பொருள் விற்பனையாளர். அவரது மனைவி மகேஸ்வரி 33. தனியார் வங்கி காசாளர். தினசரி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு, வேலைக்கு செல்வது இவர்களது வழக்கம். சில மாதங்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று, திரும்பி வந்து பார்த்த போது, பீரோவிலிருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் அரை பவுன் மோதிரம் திருடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரித்தனர். அதே பகுதியில் வசிக்கும், சிவகாமி என்பவர் தான் சங்கிலியை திருடியது தெரிய வர, போலீசார் அவரை கைது செய்தனர்.ஆடு திருடர்கள் கைதுஊத்துக்குளியில், ஆடு திருடிய சம்பவத்தில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ், 30. இவரது பட்டியில் இருந்த நான்கு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர். அதில், ராயர்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 30, சாவக்கட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 50, சேவூரை சேர்ந்த பழனிசாமி, 55 ஆகியோர் தான், ஆடு திருடினர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, பழனிசாமியை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X