பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:'ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலை, கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்புகளை (எம்.பில்., பி.ெஹச்டி.,) மேற்கொண்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,யு.ஜி.சி., சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற விரும்புவோர் www.ugc.ac.in/ugc.schemes என்ற இணைய

திருப்பூர்:'ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலை, கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்புகளை (எம்.பில்., பி.ெஹச்டி.,) மேற்கொண்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,யு.ஜி.சி., சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற விரும்புவோர் www.ugc.ac.in/ugc.schemes என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி என்பதற்கு, மத்திய, மாநில அளவில் பெறப்பட்ட தகுதி சான்றிதழை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். முதுநிலை படிப்புகளில் யு.ஜி.சி., வரையறுத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், முதல் இரு ஆண்டுக்கு உதவி தொகையாக, மாதம் தோறும், 31 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தங்குமிடம், பயணப்படி இலவசம். ஆய்வு முடிவுசிறப்பாக இருந்தால், மேலும் மூன்றாண்டுக்கு, உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X