சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நம்பிக்கையே வெற்றியை தந்தது!

Updated : டிச 22, 2020 | Added : டிச 21, 2020
Share
Advertisement
பாரம்பரியமாக, மளிகைக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த உலர் பழங்கள், சத்துள்ள கொட்டைகள் போன்றவற்றிற்காக, பிரத்யேகமான கடையை, 'நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ்' என்ற பெயரில் துவக்கி, 33 கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வருவது பற்றி, சென்னையைச் சேர்ந்த, சுனில் சங்க்லெசா: பூர்வீகம் ராஜஸ்தான். நீண்ட காலத்திற்கு முன், என் தாத்தா, தொழில் வாய்ப்புக்காக சென்னை வந்து, சவுகார்பேட்டை, கோவிந்தப்ப
சொல்கிறார்கள்

பாரம்பரியமாக, மளிகைக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த உலர் பழங்கள், சத்துள்ள கொட்டைகள் போன்றவற்றிற்காக, பிரத்யேகமான கடையை, 'நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ்' என்ற பெயரில் துவக்கி, 33 கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வருவது பற்றி, சென்னையைச் சேர்ந்த, சுனில் சங்க்லெசா:

பூர்வீகம் ராஜஸ்தான். நீண்ட காலத்திற்கு முன், என் தாத்தா, தொழில் வாய்ப்புக்காக சென்னை வந்து, சவுகார்பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் சிறிய மளிகைக்கடை துவக்கினார். அவருடன் என் தந்தையும் சேரவே, தொழில் விரிவடைந்தது.வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் தொழில்நுட்பத்தை, சென்னையில் என் தந்தை தான், பிரபலப்படுத்தினார்.

நானும், என் சகோதரர்களும், மளிகைக் கடையில் தான் நீண்ட காலமாக இருந்தோம். அந்த மளிகை கடையிலிருந்து விலகும் சூழ்நிலை, ஒரு கட்டத்தில் உருவானது.அந்த நேரம், 1999ம் ஆண்டில், சூப்பர் மார்க்கெட்டுகள், சென்னையில் பிரபலமாகி வந்தன. மளிகைக் கடை பொருட்களில், ஸ்பெஷாலிட்டி ஸ்டோர் துவக்கலாம் என்ற எண்ணம், அப்போது தான் உதித்தது. குறிப்பாக, உலர் பழங்கள், சத்துள்ள கொட்டைகள் போன்றவற்றை மட்டும் விற்கும் கடையை, அந்த ஆண்டில், 12 லட்ச ரூபாய் முதலீட்டில், சென்னை நுங்கம்பாக்கத்தில் முதலில் துவங்கினேன்.

'ஒரு கடையை துவக்கிய பின், அதில், குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே விற்பது நல்ல வியாபார தந்திரமல்ல; உங்கள் வியாபாரம் ஜெயிக்காது' என, பலரும் அப்போது எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் எனக்கு, என் வியாபாரம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது.பிரபல கடைகள் மற்றும் ெவளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும் உலர் பழங்கள், நறுமண பொருட்களை தேடித்தேடி வாங்கி வந்து, எங்கள் கடையில் விற்பனை செய்கிறோம். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

முதலில் எங்கள் கடையில் இருந்து உலர் பழங்கள், நறுமண பொருட்கள் வாங்கி, பிறருக்கு பரிசாக வழங்கியவர்கள், எங்கள் கடை பெயர், முகவரி வேண்டாம் என்றனர். ஏனெனில், தரமாக இருக்காது என்ற எண்ணம், அவர்களுக்கு இருந்தது.எனினும், அதைப்பற்றி கவலைப்படாமல், தரமான பொருட்களை, நியாயமான விலையில் விற்பனை செய்தோம்.

இப்போது, சென்னையில், 31 கிளைகள் உள்ளன; புதுச்சேரி மற்றும் கோவையில் இரண்டு கிளைகள் உள்ளன.விரைவில் பிற நகரங்களில் கிளைகளை துவக்க உள்ளோம். இது தவிர, 'ஆன்லைன்' விற்பனையும் நடக்கிறது. இந்த ஆண்டு, 100 கோடி ரூபாய் வர்த்தக இலக்கு நிர்ணயித்து உள்ளோம்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X