வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் கூடிய வாரச்சந்தையில், தொற்று பயம் சிறிதும் இல்லாமல், மக்கள் திரண்டனர்.வெள்ளகோவிலில், பிரதிவாரம் ஞாயிறன்று, வாரச்சந்தை கூடும். நேற்று கூடிய சந்தையில், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் மக்கள் திரண்டனர்.வியாபாரிகள் சிலர் கூறியதாவது:வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க, விற்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.காலை முதல் கூட்டம் குறைவாகவே இருக்கும். மதியம், சந்தை வெறிச்சோடி இருக்கும். மாலை, 4:00 மணிக்கு மேல், பொதுமக்கள் கூட்டமாக வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சந்தை மூடும் சமயத்தில், பொருட்களின் விலை குறைவாக கிடைக்கும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.சுகாதார துறையினர் கூறுகையில், 'பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் செயல்பட்டால் மட்டுமே, தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.முக கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பது மிக அவசியம். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE