சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எல்லாத்தையும் மறந்து விடுவோம்!

Updated : டிச 22, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து இறப்பு, சாலை விபத்தில் பலர் பலி, தரைப்பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்தது... இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என, அனைவருக்கும் தெரியும்.'வரும் முன் காப்போம்' என்ற எண்ணம் எல்லாம், அரசுக்கு கிடையாது.ஒருவேளை எந்த ஊரிலாவது அதிரடியாக
 இது உங்கள் இடம்

ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து இறப்பு, சாலை விபத்தில் பலர் பலி, தரைப்பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்தது... இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என, அனைவருக்கும் தெரியும்.'வரும் முன் காப்போம்' என்ற எண்ணம் எல்லாம், அரசுக்கு கிடையாது.

ஒருவேளை எந்த ஊரிலாவது அதிரடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால், பிரதமர், முதல்வர், கவர்னர் இப்படி யாராவது அங்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன், ஆழ்துளைக்காக போடப்பட்ட, 100 அடி குழியில் விழுந்த குழந்தை, மூன்று நாள் போராட்டத்திற்கு பின், சடலமாக மீட்கப்பட்டது.ஒருமுறை, இரவு நேரத்தில், கிராமத்தில் சாலையோரம் இருந்த திறந்தவெளி கிணற்றில், ஒரு மினி பஸ் விழுந்து, அதில் பயணம் செய்த, 14க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சில நாட்களுக்கு முன், சென்னையில் பெய்த கன மழையால், மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் தாயும், மகளும் விழுந்து இறந்தனர்.தேனி அருகே பாலக்கோம்பையைச் சேர்ந்த, ஹரீஷ் பாண்டியன் என்ற, 6 வயது சிறுவன், அப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டட பள்ளத்தில், தேங்கிய மழைநீரில் மூழ்கி பலியாகியிருக்கிறான்.

இது போல, ஏராளமான துயரமான சம்பவங்கள் நடந்துள்ளன. அவை, நமக்கு பெரும் வருத்தத்தை தரும்; கொஞ்ச நாளில், அந்த துயரச் சம்பவத்தை மறந்து விடுவோம்.தமிழக அரசு, பாதிக்கப்பட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு, சில லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும்; அவ்வளவு தான். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியத்திற்கு, எந்த தண்டனையும் வழங்கப்படாது.

அனைவரும் சாலை வரி கட்டுகிறோம். அதில் தான், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அவர்கள், தரமான சாலை அமைப்பதில்லை; அது குறித்து, யாரும் கேள்வி எழுப்புவதில்லை.தன் பணியை முறையாக செய்யாத அரசு அதிகாரிகளுக்கு, தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான், இந்த தேசம் உருப்படும்.

மாப்பிள்ளை தோழனாக இருக்கணும்!

திரா.திருவேங்கடம், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், மாப்பிள்ளை தோழன் மாதிரி இருக்கணும்' என்றார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.அதன் பொருள் என்னவென்றால், ஆளுங்கட்சியை எதிரி போல பாவித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயல்படக் கூடாது. மாப்பிள்ளை தோழன் போல தேவையான போது கண்டிக்கணும்; மற்றபடி, அறிவுரை சொல்வதோடு, அனுசரித்தும் போகணும் என்பது தான்.

தற்போதைய, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே தவிர, ஆக்கபூர்வமாக ஏதும் சொல்வதில்லை.பதனீரைக் குடித்த பின், 'இதில் சர்க்கரை போட்டீங்களா?' என கேட்கும் அளவிற்கு தான், அவர் உள்ளார். அவருக்கு நடைமுறை அனுபவம், சுத்தமாக இல்லை என்பது தெளிவு.

ஆளுங்கட்சி ஒரு முடிவு எடுத்தால், உடனே ஸ்டாலின் அதை எதிர்க்கிறாரே தவிர, அது பற்றி ஆய்வு செய்து, தீர்வு சொல்லக்கூடிய அளவிற்கு பொறுமை இல்லை.'கொரோனா காலத்தில் பள்ளியை துவக்கப் போகிறோம்' என, அரசு அறிவித்தாலும் எதிர்க்கிறார்; பள்ளித் திறப்பை ஒத்தி வைத்தாலும், குறை சொல்கிறார்.மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார்.

இந்த ஆண்டு, அரசுப்பள்ளி மாணவர்கள், 1,623 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்று உள்ளனர்.நீட் தேர்வு என்பது, மருத்துவம் படிக்க தகுதியுள்ள மாணவர்களுக்கானது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.இப்போது கூட, புதிய வேளாண் சட்டம் குறித்து ஏதும் தெரியாமல், பொத்தாம் பொதுவாக, 'இது, பணக்காரர்களுக்கான சட்டம்' என்கிறார்.

முதல்வர் இ.பி.எஸ்., பலமுறை, 'வேளாண் சட்டத்தில் உள்ள குறை என்னவென்று கூறுங்கள்' எனக் கேட்டும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏதும் கூறவில்லை; ஆனால், அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்.மத்திய, மாநில அரசுகள் எந்த திட்டம் அறிவித்தாலும், ஸ்டாலின் அதை எதிர்க்கணும் என்ற குறுகிய எண்ணம் கொண்டுள்ளார்.எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சிக்கு அறிவுரை கூற வேண்டும்; எதற்கெடுத்தாலும், எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.



அமைதிக்குஎதிரானது மதவாதம்!

என்.சேகு மகதுாம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டில் வாழ்வோரில், 83 சதவீதம் பேர், ஹிந்துக்கள். மிச்சமிருக்கும், 17 சதவீதத்தில் முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்டோர் இருப்பர்.பா.ஜ.,வினர் மட்டுமே, ஹிந்துக்களுக்கான கட்சி என்ற மாயையை உருவாக்கி வருகின்றனர். அந்த திட்டம் தான், பா.ஜ.,வின் தொடர் வெற்றிக்கு காரணம்.

இதனால், இங்கே உள்ள மற்ற கட்சிகளும், 'நாங்களும் ஹிந்து தான்' என்பதை, மறைமுகமாக சொல்ல துவங்கியுள்ளன.இந்நிலையில் நீடித்தால், நம் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படும். மத சார்பற்ற நாடு என்பதால் தான், நம் நாட்டில் அமைதி தவழ்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.மத சார்புள்ள நாட்டில், அமைதி நிலவவில்லை. ஆப்கனில், இரட்டை அரசு நடக்கிறது.

பாகிஸ்தானில், மசூதிக்குள் குண்டு வெடிக்கிறது. மத சார்புள்ள நாடுகளில், தினமும் வன்முறை, அடக்குமுறை, சர்வதிகாரம் தான் நிகழ்கிறது.நம்மை ஆட்சி செய்த முகலாயர், ஆங்கிலேயர், சீனாவின் பிடியில் இருந்து, நம் நாட்டை காப்பாற்றியுள்ளனர்.சுதந்திரத்திற்கு பின், பிரதமரான நேரு, நம் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர், மதவாத ஆட்சி நடத்தவில்லை; மத சார்பற்ற நாடாகவே நடத்தினார்.

நாம் இழந்த காஷ்மீர், திபெத் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும். அவற்றை, மதவாத அரசால் மீட்கவே முடியாது.காஷ்மீரில் வாழும் பெரும்பாலானோர் முஸ்லிம் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். மதவாதம் என்றென்றும் அமைதிக்கு எதிரானது.lll

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
21-டிச-202013:31:03 IST Report Abuse
JeevaKiran அரசு அதிகாரிகள், அந்த துறைக்கு அமைச்சர் போன்றோர் முறையாக தண்டிக்கப்பட்டால்தான் தவறுகள் குறையும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-டிச-202010:32:00 IST Report Abuse
Darmavan எல்லா மத சார்புள்ள நாடுகளும் ஒன்று அல்ல.யானைகள் கூட்டமாக வாழும் புலி சிங்கம் அப்படி இல்லை.எனவே குணத்துக்கு ஏற்ப நல்லது கேட்டது இறுக்கியும்.இந்த நாட்டை ஹிந்து நாடாக அறிவிக்காது காந்தி நேரு ஹிந்துக்களுக்கு செய்த துரோகம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-டிச-202006:14:26 IST Report Abuse
D.Ambujavalli ‘மாப்பிள்ளைத் தோழனாக ‘ இருந்தால், அவருக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்கும் அவ்விதம் இருப்பவர் ‘மாப்பிள்ளையின்’ துதி பாடியாகத்தான் இருப்பார் அதைத்தான் அரசு எதிர்பார்க்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X