கலப்படக்காரர் மீது நடவடிக்கை தென்னை விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலப்படக்காரர் மீது நடவடிக்கை தென்னை விவசாயிகள் கோரிக்கை

Added : டிச 21, 2020
Share
பொங்கலுார்:தென்னை விவசாயிகள் கூறியதாவது:இந்தாண்டு தேங்காய் விளைச்சல் குறைந்ததால் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு தேங்காய், 25 ரூபாய், ஒரு கிலோ கொப்பரை, 128 ரூபாய்க்கு விலை போகிறது. விலை உயர்வை சாதகமாக்கி, தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வோர், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். கலப்படம் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

பொங்கலுார்:தென்னை விவசாயிகள் கூறியதாவது:இந்தாண்டு தேங்காய் விளைச்சல் குறைந்ததால் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு தேங்காய், 25 ரூபாய், ஒரு கிலோ கொப்பரை, 128 ரூபாய்க்கு விலை போகிறது. விலை உயர்வை சாதகமாக்கி, தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வோர், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். கலப்படம் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். வரும் தை முதல், வரத்து அதிகரிக்கும். அப்போது இயல்பாகவே விலை சரியும். கலப்படம் தொடர்ந்தால், விலை மேலும் சரியும் வாய்ப்புள்ளது. எனவே, கலப்படம் செய்வோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X