திருப்பூர்:நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது உறவினர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருப்பூரை அடுத்த மூலனுார், கருங்காளிவலசுவை சேர்ந்தவர் அஜிதா, 35. தாராபுரம் நகராட்சியின், கிருமிநாசினி தெளிக்கும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம், வீட்டில், துாக்கு மாட்டி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், அவரது உறவினர்கள் நகராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.அவர்கள் போலீசாரிடம் கூறுகையில்,'அஜிதா, பணியில் இருந்த போது, சுகாதார அதிகாரி சிலர், அவரை திட்டியுள்ளனர்; பணியில் இருந்து நிறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்றனர். உரிய விசாரணை நடத்துவதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE