செடிகளை தாக்கி வரும் இலைப்பேன் : நோயை தடுக்கும் மஞ்சள் அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செடிகளை தாக்கி வரும் 'இலைப்பேன்' : நோயை தடுக்கும் 'மஞ்சள் அட்டை'

Added : டிச 21, 2020
Share
ஊட்டி:'உருளைக்கிழங்கு செடிகளை தாக்கி வரும்'இலைப்பேன்' நோயை தடுக்க 'மஞ்சள் அட்டை' பயன்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் உருளைக் கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி உருளைக் கிழங்குக்கு மேட்டுப்பாளையம், கோவை, சென்னை, பெங்களூரு உட்பட பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் கிராக்கி உள்ளது.

ஊட்டி:'உருளைக்கிழங்கு செடிகளை தாக்கி வரும்'இலைப்பேன்' நோயை தடுக்க 'மஞ்சள் அட்டை' பயன்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் உருளைக் கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி உருளைக் கிழங்குக்கு மேட்டுப்பாளையம், கோவை, சென்னை, பெங்களூரு உட்பட பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் கிராக்கி உள்ளது. நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தாலும், காலநிலை மாற்றம், மோசமான விதையால் விளைச்சல் குறைவாக உள்ளது. தற்போது, கிழகை 'இலைப் பேன்' நோய் தாக்கி வருவதால், கிழங்கு வரத்து, 50 சதவீதமாக குறைந்தது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஊட்டி உருளைக்கிழங்கு, மேட்டுப்பாளையம் சந்தைக்கு குறைந்தளவில் கொண்டு செல்லப்படுகிறது. ஊட்டி உருளை கிழங்கு மகசூல் குறைந்ததால், ஆக்ரா இந்துாரில் இருந்து உருளைக் கிழங்கு, மேட்டுப்பாளையம் சந்தைக்கு வரத்துவங்கியுள்ளன.தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'இலைப்பேன்' நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், இதை தடுக்க உருளைக் கிழங்கு தோட்டத்தில் ஆங்காங்கே'மஞ்சள் அட்டை' தொங்கவிட வேண்டும், செடிகளை தாக்க வரும், 'இலைப் பேன்' அதில் ஒட்டி இறந்துவிடும், இதையே விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். நுந்தளா உட்பட சில பகுதிகளில் இது போன்ற அட்டை வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X