முல்லைக்கு தொல்லை கொடுத்த எம்.எல்.ஏ., | Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முல்லைக்கு தொல்லை கொடுத்த எம்.எல்.ஏ.,

Updated : டிச 22, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (4)
Share
''ரவுடியும், அரசு அதிகாரியும் கூட்டணி சேர்ந்தால், இந்த நாடு உருப்படுமா வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''என்ன இவ்வளவு விரக்தியில பேசுறீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவிற்குட்பட்ட, பவுஞ்சூர் கிராமத்துல இருக்குற நிலங்களை, அங்குள்ள ரவுடியின் ஆட்கள் ஆக்கிரமிக்கிறாவ...''நில உரிமையாளர்கள் இது
டீ கடை பெஞ்ச்

''ரவுடியும், அரசு அதிகாரியும் கூட்டணி சேர்ந்தால், இந்த நாடு உருப்படுமா வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''என்ன இவ்வளவு விரக்தியில பேசுறீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவிற்குட்பட்ட, பவுஞ்சூர் கிராமத்துல இருக்குற நிலங்களை, அங்குள்ள ரவுடியின் ஆட்கள் ஆக்கிரமிக்கிறாவ...''நில உரிமையாளர்கள் இது குறித்து, வி.ஏ.ஓ.,விடம் விஷயத்தை சொன்னால், 'ரவுடியிடம் பிரச்னை வேண்டாம்... குறிப்பிட்ட தொகையை கொடுத்து, பிரச்னையை சுமுகமாக முடிச்சுக்குங்கோ'ன்னு சொல்லுறாராம் வே...

''எவ்வளவு கொடுக்கணுமுன்னு, வி.ஏ.ஓ.,வே சொல்லுறாராம்... பணம் தர முடியாதுன்னு சொன்னால், 'உங்கள் இடத்தில் வில்லங்கம் இருக்கு'ன்னு சொல்லி மிரட்டுறாராம் வே...''அந்த வி.ஏ.ஓ., - ரவுடி கூட்டணி வசூலை அள்ளி குவிக்குதாம்... ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கணுமுன்னு, பாதிக்கப்பட்டோர் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அவ்வழியாக சென்ற இருவரை பார்த்து, 'ரவியும், மகேசும் எங்கே கிளம்பிட்டீங்க...' என, அந்தோணிசாமி விசாரித்தார்.

''இருக்கா, இல்லையான்னு, நடிகர் வடிவேலு மாதிரி புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னையில, 14ம் தேதி, அ.தி.மு.க., அமைச்சர், மண்டல பொறுப்பாளர், மாவட்ட செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்துச்சு பா...''முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட செயலர் மற்றும் மண்டல பொறுப்பாளரை, தனித்தனியே அழைத்து பேசினாங்க பா...

''அப்போது, 'வர்ற சட்டசபை தேர்தலில், மெகா கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கு... அதே நேரம் கூட்டணி அமையலைன்னா, தனிச்சு நின்னு ஜெயிக்குறதுக்கும் தயாராக இருக்கணும்' என, சொல்லிஇருக்காங்க பா...

''இதனால மாவட்ட செயலர்கள், 'கூட்டணி இருக்கா, இல்லையா' எனத் தெரியாமல், தலையை பிச்சிகிட்டு கிளம்பியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்
''முல்லைக்கு தொல்லை கொடுத்த, எம்.எல்.ஏ., மேல, முதல்வர் கோபமாஇருக்கார் ஓய்...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்னன்னு விளக்கமாக சொல்லுங்க...'' என, ஆர்வமாகக் கேட்டார், அந்தோணிசாமி.

''முதல்வர் இ.பி.எஸ்., பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு போனப்போ, அப்பகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வரவேற்பு கொடுத்தாங்க ஓய்...

''அதுல, பெரம்பலுார் எம்.எல்.ஏ.,வை மட்டும், முதல்வர் கண்டுக்காம போயிட்டாராம்... முதல்வர் காலில் விழுந்தும், அவர் கண்டுக்கலை என்பதால், எம்.எல்.ஏ., அதிர்ச்சியில இருக்காராம் ஓய்...

''சமீபத்துல தற்கொலை பண்ணிக்கிட்ட, 'டிவி' நடிகைக்கு, இவர், 'ஆடி' கார் வாங்கி கொடுத்தாருன்னு பேச்சு இருக்கு... அந்த முல்லை நடிகைக்கு, இவரும் தொல்லை கொடுத்தாருன்னு, உளவுத் துறை சொல்லியிருக்கு ஓய்...

''அதனால, அந்த எம்.எல்.ஏ., மேல முதல்வர் கடும் கோபத்துல இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''இன்னைக்கு, 'டிவி'யில, தமிழ்செல்வன் படம் போடுறாங்க... நான் பார்க்கணும் பா...'' என்றபடியே, அன்வர்பாய் கிளம்ப, நண்பர்களும் இடத்தை காலி செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X