பொது செய்தி

தமிழ்நாடு

குன்னூர் தேயிலை ஏலம் :ரூ.18.19 கோடி விற்பனை

Added : டிச 21, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில், 18.19 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 51வது ஏலத்தில், விற்பனைக்கு வந்த, 18.30 லட்சம் கிலோ இலை; 'டஸ்ட்' ரகங்களில், 16.22 லட்சம் கிலோ விற்றது. 88.60 சதவீதம் விற்றதில்,18.19 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவுக்கு, 112.17 ரூபாய் கிடைத்தது; 5 ரூபாய் வரை ஏற்றம் கண்டது. இலை ரகத்தில், 88.35 சதவீதம் விற்ற

குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில், 18.19 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.குன்னுார் தேயிலை ஏல மையத்தில், 51வது ஏலத்தில், விற்பனைக்கு வந்த, 18.30 லட்சம் கிலோ இலை; 'டஸ்ட்' ரகங்களில், 16.22 லட்சம் கிலோ விற்றது. 88.60 சதவீதம் விற்றதில்,18.19 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவுக்கு, 112.17 ரூபாய் கிடைத்தது; 5 ரூபாய் வரை ஏற்றம் கண்டது. இலை ரகத்தில், 88.35 சதவீதம் விற்ற நிலையில், கிலோவுக்கு சராசரி விலை, 106.80; 'டஸ்ட்' ரகத்தில், 89.37 சதவீதம் விற்றதில் சராசரி விலை, 128.65 ரூபாய் எனவும் இருந்தது.கடந்த சில வாரங்களாக விலையில் வீழ்ச்சியை நோக்கி சென்ற நிலையில், தற்போது சற்று ஏற்றம் கண்டது. எனினும் கடந்த வாரத்தை விட, 1.76 லட்சம் கிலோ விற்பனை குறைந்ததால், 1.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.செப்., மாதம் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்ட நிலையில், வாரந்தோறும் விலை குறைந்து வருகிறது. 3வது மாத துவக்கத்தில், கடும் வீழ்ச்சியடைந்து, பழைய நிலைக்கு விலை சென்று வருகிறது. அடுத்த மாதம் பசுந்தேயிலைக்கு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X