பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளில் பழ மரக்கன்றுகள் நடவு

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை கலைஞர் நகர் பகுதியில், 'ஆலம் விழுது' சூழல் பாதுகாப்பு அமைப்பினர், பல்வேறு பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்தனர்.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், குடியிருப்பு பகுதிகள், ரோட்டோரங்கள், பூங்கா பகுதிகளில், 'ஆலம் விழுது' சூழல் பாதுகாப்பு அமைப்பினர், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மாணவர்கள், சிறுவர்களுக்கு, சூழல் பாதுகாப்பு குறித்து

ஆனைமலை:ஆனைமலை கலைஞர் நகர் பகுதியில், 'ஆலம் விழுது' சூழல் பாதுகாப்பு அமைப்பினர், பல்வேறு பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்தனர்.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், குடியிருப்பு பகுதிகள், ரோட்டோரங்கள், பூங்கா பகுதிகளில், 'ஆலம் விழுது' சூழல் பாதுகாப்பு அமைப்பினர், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மாணவர்கள், சிறுவர்களுக்கு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, 71வது வார களப்பணியாக, ஆனைமலை கலைஞர் நகரில் உள்ள பூங்கா பகுதியில், மரக்கன்றுகள் நடவு செய்தனர். நாவல், புங்கன், அத்தி, மகிழம், அசோகன், நெல்லி, கொய்யா, இலுப்பை, சீதா பழம் என, பல்வேறு பழ வகை மரக்கன்றுகள் நடவு செய்தனர். அப்பகுதி மக்கள், சிறுவர்கள் இக்குழுவுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X