கிணத்துக்கடவு:கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில், ரோட்டின் அருகே விளையாட்டு மைதானம் உள்ளது. இதன் அருகே கிராம சேவை மையம் மற்றும் சுகாதார காழிப்பிடம் உள்ளது. இம்மைதானத்தில், இளைஞர்கள் மாலை நேரத்தில் வாலிபால் விளையாடி வந்தனர்; முதியோர்கள் நடைபயிற்சி செய்து வந்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விளையாட்டுகள் தடை செய்யப்பட்டதால், மைதானத்தில் இளைஞர்கள் விளையாடாததால், புற்களும், செடிகளும் அடர்ந்து காணப்படுகிறது.மேலும், இம்மைதானத்தில், குழந்தைகள் வியைாடுவதற்கான சரக்கு மேடை, ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படாமல் உள்ளதால், குழந்தைகள் விளையாடுவதற்காக அருகில் உள்ள சூலக்கல் ஊராட்சிக்கு சென்று வருகின்றனர்.இங்குள்ள மைதானத்தில், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும், மைதானத்தை சுற்றிலும், கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊராட்சி தலைவர் ஆனந்தி கூறுகையில், ''கோவிந்தாபுரம் கிராம விளையாட்டு மைதானம் பராமரிக்கப்பட்டு, விரைவில், குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் வைக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE