பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா: உடனடியாக அமைத்தால் நலம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:'கிணத்துக்கடவு பேரூராட்சியில் குப்பை உரமாக்கும் திட்டத்திற்கு, வளம் மீட்பு பூங்கா கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளில் சேமிக்கப்படும் குப்பை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இருந்து துப்புரவு

கிணத்துக்கடவு:'கிணத்துக்கடவு பேரூராட்சியில் குப்பை உரமாக்கும் திட்டத்திற்கு, வளம் மீட்பு பூங்கா கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளில் சேமிக்கப்படும் குப்பை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வீடு,வீடாக சென்று குப்பை வாங்கி வந்து மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து சேகரிக்கின்றனர்.ஆனால், மக்காத குப்பை தீயிட்டு எரிக்க பேரூராட்சிக்கு என்று சொந்தமான இடம் இல்லை. இதனால், துப்புரவு பணியாளர்கள் குப்பை வாங்கும் இடத்தில், கொட்டி தீயிட்டு அழித்து வருகின்றனர்.இதன் காரணமாக கரும் புகையும், துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், மக்கும் குப்பை உரமாக மாற்றுவதில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் கிடைப்பது தடைபட்டுள்ளது.நெகமம் பேரூராட்சியில், வளம் மீட்பு பூங்கா அமைத்து, மக்கும் குப்பை உரமாக மாற்றுகின்றனர். இதேபோல், கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகமும் வளம் மீட்பு பூங்கா கட்டி உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X