பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, வடக்கிபாளையம் நடுநிலைப்பள்ளிக்கு புது கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த ஆண்டு, தலைமையாசிரியர் அறைக்கு அருகில் இருந்த, இரு வகுப்பறைகள் கொண்ட பழைய கான்கிரீட் கட்டடம் இடிக்கப்பட்டு, சமீபத்தில் அகற்றப்பட்டது.அதே இடத்தில், புது கட்டடம் அமைக்க, ஒன்றியம் மற்றும் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அதன்பின், எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது.எஸ்.எஸ்.ஏ., நிதியில், கட்டடம் கட்டித்தரப்படும் என, இடிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கோவை பகுதி பள்ளிகள் சிலவற்றுக்கு கட்டடம் கட்ட இருப்பதால், அடுத்த ஆண்டு வடக்கிபாளையம் பள்ளிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனால், ஏற்கனவே இருக்கும் கட்டடங்களில், செயல்படும் வகுப்பறைகளை பகிர்ந்து, கூடுதலாக இரு வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி வளாகத்துக்கு, 6.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேலை உறுதியளிப்பு திட்டத்தில், சுற்றுச்சுவர் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் தரை தளம் சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE