உடுமலை:உடுமலையில், மீண்டும் தெருநாய்களின் அட்டகாசம் ஆரம்பமாகியுள்ளதால், வீதிகளில் நடக்கும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.உடுமலை நகரில், மக்களை அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது, நாய்த்தொல்லை.சில ஆண்டுகளுக்கு முன் வரை, தனியார் அமைப்புகளுடன் ஒப்பந்த அடிப்படையில், தெருநாய்களை பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இப்பணிகளை செய்ய, நகராட்சி நிர்வாகத்தில், 'நாய் பயண வாகனம்' வாங்கப்பட்டு நகராட்சிபணியாளர்கள் இப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.அப்பணியாளர்களுக்கு, நாய்களை பிடிப்பது மற்றும் அவற்றுக்கான சிகிச்சை போன்றவற்றில் பயிற்சி இல்லாதால், அந்த வாகனம் பயன்பாடில்லாமல் இருந்தது. பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, மீண்டும் தனியார் அமைப்பினரைக்கொண்டு, இந்நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.நாய்களின் தொல்லை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக மீண்டும் தெருநாய்களின் எண்ணிக்கை முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளதோடு, தொல்லையும் ஆரம்பமாகியுள்ளது. நிம்மதியிழந்துள்ள மக்கள், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE