பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டி பலகை: தவறில்லாமல் அச்சிட எதிர்பார்ப்பு

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், முக்கிய ரோடுகளில் வழிகாட்டி பலகைகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், தவறான தகவல்கள் அச்சிடுவதால், மக்கள் குழப்பமடையும் நிலை ஏற்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. தினமும், பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் வந்து

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், முக்கிய ரோடுகளில் வழிகாட்டி பலகைகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், தவறான தகவல்கள் அச்சிடுவதால், மக்கள் குழப்பமடையும் நிலை ஏற்படுகிறது.பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. தினமும், பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், வாகன ஓட்டுனர்களுக்கு வழிகாட்டவும், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தமிழக சுற்றுலாத்துறையினர், முக்கிய ரோடுகளில் வழிகாட்டி பலகைகள் பொருத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறையினர், பொள்ளாச்சி, நா.மூ.சுங்கம், ஆழியாறு, ஆனைமலை இந்திரா நகர், மாசாணியம்மன் கோவில், மீனாட்சிபுரம், அம்பராம்பாளையம் சுங்கம், சேத்துமடை உள்பட பல பகுதிகளில், வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளனர். சுற்றுலா துறையினர் பொள்ளாச்சி, கரியாஞ்செட்டிபாளையம், ஆனைமலை பகுதிகளில், வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளனர். பல இடங்களில் புதியதாக வழிகாட்டி பலகைகள் வைத்து வருகின்றனர். ஆனால், வழிகாட்டி பலகைகளில் பல இடங்களில், ஊர் பெயர்களிலும், கி.மீ., தொலைவு குறித்த தகவல்களை தவறாக அச்சிட்டு பொருத்துகின்றனர். சமீபத்தில், மீனாட்சிபுரம் பகுதியில் ஊர்களின் திசை, கி.மீ.,ல் இருந்த பிழை திருத்தப்பட்டது.தற்போது, சேத்துமடை பகுதியிலுள்ள பலகையில், பரம்பிக்குளத்துக்கு கி.மீ., தவறாக அச்சிட்டுள்ளனர். இது போன்ற தவறுகளால், பலகைகள் வைத்தும் மக்களுக்கு பயன்படாத, குழப்பமான சூழலை உருவாக்குகிறது. வழிகாட்டி பலகைகளில் நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலாத்துறையினர், தவறில்லாமல் தகவல்களை அச்சிட வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X