பொள்ளாச்சி:பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர், சர்வதேச வலுதுாக்கும் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார்.சர்வதேச அளவிலான வலுதுாக்கும் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்தது. இதில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர் நிர்மல், தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார். ரஷ்யா, ஜப்பான், இங்கிலாந்து உள்பட ஒன்பது நாடுகள் பங்கேற்றன. அதில், 23வயதுக்கு உட்பட்ட, 'யூத்' பிரிவில், 75 கிலோ எடைப்பிரிவில், ஷ்குவாட் முறையில், 210 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில், 145 கிலோ, டெட்லிப்ட் பிரிவில், 250 கிலோ, என மொத்தம், 605 கிலோ எடை துாக்கி முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.வெற்றி பெற்ற மாணவரை, கல்லுாரி தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் சோமு, உடற்கல்வி இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE