உடுமலை:உடுமலை, தாலுகா அலுவலகத்தில், வாகனங்கள் விதிமுறை இல்லாமல் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.உடுமலை, தாலுகா அலுவலகத்துக்கு நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான 'பார்க்கிங் வசதி' குறைவான இடத்தில் மட்டுமே உள்ளது.வளாகத்தை சுற்றிலும் இடவசதி இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் நிறுத்துவதற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. இருப்பினும், விதிமுறைகளை மதிக்காமல், பலரும் நடந்துகொள்வதால், பொதுமக்களுக்கு இடையூறாக மாறியுள்ளது. நான்கு சக்கர வாகனங்களை, அலுவலகத்துக்கு முன்பாக வளாகத்தை மறித்து நிறுத்திக்கொள்வதால்,பொதுமக்கள் சென்று வருவதற்கும், காத்திருக்கவும் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படுகிறது. அலுவலர்களின் வாகனங்களாக இருப்பினும், அவற்றையும் விதிமுறையோடு நிறுத்த வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE