குறியீடு இல்லாத வேகத்தடை: தடுமாறும் வாகன ஓட்டிகள்

Added : டிச 21, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வடபுதுார் பிரிவு அருகே அமைக்கப்பட்ட வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு முதல் வீரப்பகவுண்டனுார் செல்லும் ரோட்டில், வடபுதுார் கிராமம் திரும்பும் இடத்திற்கு முன்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதியிலும், சிக்கலாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகேயும்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வடபுதுார் பிரிவு அருகே அமைக்கப்பட்ட வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறைக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு முதல் வீரப்பகவுண்டனுார் செல்லும் ரோட்டில், வடபுதுார் கிராமம் திரும்பும் இடத்திற்கு முன்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதியிலும், சிக்கலாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகேயும் அடுத்தடுத்து இரண்டு வேகத்தடைகள் நெடுஞ்சாலைத்துறையால், அமைக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் லாரிகள் லோடு ஏற்றிக்கொண்டு செல்கிறது. வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசாமல் உள்ளதால், வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் புதிதாக வாகனங்களில் வருபவர்கள் பலரும் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். இதனை தவிர்க்க, இரண்டு வேகத்தடைகளுக்கும் வெள்ளை நிற வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X