நகரில் அரைகுறையாக ரோடு சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் குமுறல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், ரோடு சீரமைப்பில், அரைகுறை அதிகாரிகள் பணியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்டது. அதன் பின் சீரமைக்காததால் குண்டும், குழியுமாக உருமாறியது. கடந்த ஐந்து மாதங்களுக்கு குழி தோண்டப்பட்ட இடங்களில், கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், ரோடு அதற்குள் பெயர்ந்து மீண்டும்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், ரோடு சீரமைப்பில், அரைகுறை அதிகாரிகள் பணியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்டது. அதன் பின் சீரமைக்காததால் குண்டும், குழியுமாக உருமாறியது. கடந்த ஐந்து மாதங்களுக்கு குழி தோண்டப்பட்ட இடங்களில், கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், ரோடு அதற்குள் பெயர்ந்து மீண்டும், குழியாக பல இடங்களில் மாறியுள்ளது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.நாளிதழில் வெளியிடப்பட்ட இடத்தை மட்டும் சீரமைத்துள்ளனர். ஆள் இறங்கும் குழி அருகே சேதமடைந்த ரோட்டை பெயர்த்து அங்கு கான்கிரீட் அமைத்து சென்றுள்ளனர். மற்ற இடங்கள் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நியூஸ்கீம் ரோட்டில், விபத்து அபாயம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக அந்த இடம் சீரமைக்கப்பட்டது வரவேற்கதக்கது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் ரோடுகளை சீரமைக்காமல் விட்டுள்ளனர்,' என்றனர்.இது சரியா...பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகம் - எல்.ஐ.ஜி., காலனி ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள, 'மெகா சைஸ்' குழியால் விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்தும், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில், கட்டடம் இடிக்கப்பட்ட கழிவுகளை கொட்டி சமப்படுத்தாமல் சென்றுள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ரோடு குழியாக உள்ளது என புகார் வந்தால் மேலும் கட்டட கழிவுகளை கொட்டி சமப்படுத்தாமல் விபத்துக்கு மேலும் வழிவகுத்துள்ள அதிகாரிகளின் செயல் வேதனை அளிக்கிறது. 'கடமை'க்கு வேலை செய்யாமல் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் பலன் அளிக்கும் என மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X