பொது செய்தி

தமிழ்நாடு

'விட்டுறு... மாறிக்க... ஊட்ரே...' களத்தில் காளைகள் பாய்ச்சல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த மணல்மேட்டில், நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகள் சார்பில் ரேக்ளா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி அடுத்த மணல்மேடு கருப்பராயன் கோவில் - குளத்து ரோட்டில் நேற்று, பொன்னாச்சியூர், சமத்துார் மற்றும் பில்சின்னாம்பாளையம் விவசாயிகள் மற்றும் ரேக்ளா நண்பர்கள் சார்பில், இரண்டாம் ஆண்டு ரேக்ளா போட்டிகள்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த மணல்மேட்டில், நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகள் சார்பில் ரேக்ளா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி அடுத்த மணல்மேடு கருப்பராயன் கோவில் - குளத்து ரோட்டில் நேற்று, பொன்னாச்சியூர், சமத்துார் மற்றும் பில்சின்னாம்பாளையம் விவசாயிகள் மற்றும் ரேக்ளா நண்பர்கள் சார்பில், இரண்டாம் ஆண்டு ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டன. காங்கேயம் காளைகள் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், பாரம்பரியம் காக்கவும் நடத்தப்பட்ட இப்போட்டியில், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, காங்கேயம், கரூர், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இரண்டு முதல், நான்கு பற்களுடைய காளைகளுக்கு, 200 மீ., தொலைவுக்கும், நான்கு பற்களுக்கு மேலுள்ள காளைகளுக்கு, 300 மீ., தொலைவுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.ஊரடங்கு அமலுக்கு பின், ஒன்பது மாதங்கள் இடைவெளிக்குப்பின், கோவை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக நடக்கும் ரேக்ளா போட்டி என்பதால், அதிக அளவிலான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.போட்டி துவங்கும் இடத்தில் நின்று, 'விட்டுறு, மாறிக்க...', ஊட்ரே... ஊட்ரே... என பலவித சப்தமிட்டு, கைதட்டி மகிழ்ந்தனர். பந்தய களத்தில் காளைகள், வெற்றி இலக்கை நோக்கி நான்குகால் பாய்ச்சலில், ஆக்ரோஷமாக ஓடி அசத்தியது.200 மீ., போட்டியில் முதல், 25 இடம் பிடித்த காளைகளுக்கும், 300 மீ., போட்டியில் முதல், 20 இடம் பிடித்த காளைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X