பொது செய்தி

தமிழ்நாடு

போலியை தடுக்க வேளாண் துறை ஆய்வு: உரக்கடைகளுக்கு எச்சரிக்கை

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி உரக்கடைகளில், போலி உரம், பூச்சிக்கொல்லி விற்பனையை தடுக்கவும், மானிய உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை கண்காணிக்கவும், வேளாண்துறையினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில், அரசு மானியத்தில் வழங்கப்பட்ட யூரியா உரம் பயன்படுத்தி, சட்ட விரோதமாக, 'பிளைவுட் பசை'

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதி உரக்கடைகளில், போலி உரம், பூச்சிக்கொல்லி விற்பனையை தடுக்கவும், மானிய உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை கண்காணிக்கவும், வேளாண்துறையினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனைமலை அடுத்த கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில், அரசு மானியத்தில் வழங்கப்பட்ட யூரியா உரம் பயன்படுத்தி, சட்ட விரோதமாக, 'பிளைவுட் பசை' தயாரிக்கப்பட்டது கடந்த மாதம், 18ம் தேதி கண்டறியப்பட்டது. அந்த கம்பெனியை பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள், 42 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்தனர்.அதன்பின், கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள உரக்கடைகளில், வேளாண்துறையினர் ஆய்வு செய்து, இருப்பு விபரம், உண்மையில் விவசாயிகளுக்குத்தான் உரம் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், 12 ஒன்றியங்களிலும் உள்ள உரக்கடை உரிமையாளர்களுக்கு, கூட்டம் நடத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆதார் எண் பெற்று, விற்பனை முனை இயந்திரம் வாயிலாக மட்டுமே, உரம் விற்பனை செய்ய வேண்டும். ஒரு டன் அளவுக்கு உரம் பெறும் பெரிய விவசாயிகளிடம், நில ஆவணங்கள் பெற வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு போலி, காலாவதியான உரம், பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்பவர்களுக்கும், மானிய உரத்தை தனியாருக்கு விற்பனை செய்வோருக்கும், அபராதம் விதித்து, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடிவெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X