டிசம்பர் 21, 1972
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவன்துலாவில், 1972 டிச., 21ல் பிறந்தவர், ஜெகன் மோகன் ரெட்டி. இவரது தந்தை, ஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.ஜெகன், வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். காங்., சார்பில் போட்டியிட்டு, எம்.பி.,யாக, பார்லிமென்டுக்கு சென்றார். முதல்வராக இருந்த போது, ராஜசேகர ரெட்டி, விமான விபத்தில் இறந்ததால், மாநில அரசியலுக்கு ஜெகன் மோகன் திரும்பினார்.
2011ல், காங்கிரசில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை துவக்கினார். பல்வேறு வழக்குகள் காரணமாக, 16 மாதங்கள் சிறை வாசமும் அனுபவித்தார்.கடந்த, 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, ஆந்திரா முழுதும், 430 நாட்கள், 3,648 கி.மீ., யாத்திரை மேற்கொண்டார்.
2019ல் நடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஜெகன் மோகன், ஆந்திர முதல்வராக பதவியேற்றார்.ஆந்திர முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE