பொள்ளாச்சி:பொள்ளாச்சி விவசாய கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், ஆவல் சின்னாம்பாளையத்தில் நடந்தது.கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகளாக தலைவராக ராஜசேகர், துணை தலைவராக தவசெல்வகுமாரன், செயலாளர் பாலசண்முகம் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பண்ணையாளர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச வளர்ப்பு தொகையாக, 4.50 ரூபாயில் இருந்து, ரூபாய் 6.50 ஆக உயர்த்தியும்; தீவன கட்டுப்பாடு இன்றி கோழி பிடிப்பதாகவும் அறிவித்து இருந்த நிறுவனங்களுக்கும், கால்நடைத்துறை அமைச்சருக்கும், அனைத்து சங்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும், 2021ம் ஆண்டு ஏப்., மாதத்தில் மீண்டும் பி.சி.சி.,ஐ அணுகி, ஆண்டுதோறும், 20 சதவீதம் கூலி உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தங்கராஜ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE